நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்ட அடிப்படைவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேரை, தமிழக கியூ பிரிவு போலீசார் பெங்களூரில் கைது செய்துள்ளனர்.
அடிப்படைவாத இயக்கத்தை சேர்ந்த சிலர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜிகாத் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவது குறித்த தகவல், தமிழ்நாடு காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவுக்கு கிடைத்தது. அவர்களுள் சிலர் மதவாத செயல்கள் தொடர்பான வழக்குகளிலும், ஒரு முக்கிய கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
இக்குழுவினர் இதே போன்று பெங்களூருவில் செயல்பட்டு வரும் மற்றொரு குழுவினருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களிலும் இக்குழுவினரின் நடவடிக்கைகளை கண்காணித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களுடைய ஒத்துழைப்பையும் தமிழ்நாடு காவல்துறையினர் பெற்றனர்.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தமிழ்நாடு க்யூ பிரிவு காவல் துறையினர் கர்நாடக காவல்துறையினர் மற்றும பிற அமைப்புகளின் உதவியுடன் பெங்களுரீல் வசித்து வந்த முகமது ஹனீப்கான், அப்துல் சுபனால், இம்ரான்கான் ஆகியோரை செவ்வாய்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கைத்துப்பாக்கிகள், குண்டுகளும் கைப்பப்பற்றப்பட்டன. சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையி அடைக்கப்பட்டதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.