எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான முத்தமிழ் செல்வி, தற்போது அன்டார்டிகா கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமான வின்சன் சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.
இயற்கையை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 16 ஆயிரம் அடி உயர சிகரத்தில் ஏறியதாக விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட முத்தமிழ் செல்வி கூறியுள்ளார்.