நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதப்படுத்தி விட்டு போக்கு காட்டி வந்த புல்லட் என்ற யானையின் இருப்பிடத்தை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
தனியாக சுற்றி வந்த யானை தற்போது கூட்டத்தோடு சேர்ந்து தேயிலை தோட்டத்தில் சுற்றி வருவது ட்ரோன் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.