நாகையில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்கள் தங்களைத் தாக்கி ஃபைபர் படகில் இருந்த மீன்கள், வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்டவற்றை அபகரித்து சென்றதாக அக்கரைப்பேட்டை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு படகுகளில் வந்த 6 கடற்கொள்ளையர்கள் தாக்கியதால் காயமடைந்து கரைக்கு வந்து சேர்ந்த மூன்று மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.