திருப்பத்தூரில் அரசு மருத்துவர் சங்கரி கடந்த 9ம் தேதி வீட்டு பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்த போது அதில் 25 பவுன் நகைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கரி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில் சங்கரி தம்பதியர் தங்கள் வீட்டு பீரோவை பூட்டாமல் வைத்திருந்த நேரத்தில், வீட்டில் வேலை செய்த மல்லிகா என்ற பெண் நகைகளை திருடி வீட்டிற்கு எடுத்து சென்றது தெரியவந்தது.
திருட்டுக்கு உடந்தையாக இருந்த மல்லிகாவின் கணவரையும் கைது செய்த போலீசார் 20 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.
மீதமுள்ள 5 சவரன் நகையை தம்பதி விற்று செலவழித்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.