திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு - கேரளா எல்லை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கேரளா கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழக எல்லைக்குள் நுழைந்து கழிவுகளை கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லூர் பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் வந்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்து சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த மனோகரன், மாயாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டதாக கூறினார்.