மும்பையில் கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து எலிஃபெண்டா தீவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு மீது, கடற்படைக்கு சொந்தமான அதிவேக படகு ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது.
நேற்று மதியம் படகில் 112 பயணிகள் சுற்றுலாவுக்குச் சென்ற நிலையில், கடற்படை வீரர்கள் சிலர் அதிவேக சிறிய ரக படகை எடுத்துக்கொண்டு என்ஜின் சோதனையில் ஈடுபட்டபோது கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது.
இதில் பயணிகள் படகு கவிழ்ந்து 112 பேரும் மரண ஓலம் எழுப்பி காப்பாற்றும்படி கூக்குரலிட்டனர். 5 படகுகள், 4 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில் 99 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 3 கடற்படை வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
படகில் பயணித்தவர்களுக்கு லைஃப் ஜாக்கெட் எனப்படும் உயிர் காக்கும் உடை வழங்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், விபத்து குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.