யூடியூபர் சவுக்கு சங்கரை டிசம்பர் 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட சவுக்கு சங்கர், நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் கைது செய்யப்பட்ட அவர் தேனி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.