யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த சென்னை தேனாம்பேட்டை போலீசார், தேனி செட்டியபட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறை பெண் அதிகாரிகளை அவதூறாக பேசிய விவகாரத்தில், மே மாதம் 4ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்தார்.
ஆனால், அப்போது, கஞ்சா வைத்திருந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.