பழைய நாணயத்துக்கு 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என சமூக வலைதள பதிவுகளை நம்பி பழைய நாணயங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை தருவதாக கூறி திருப்பத்தூரில் கடை விரித்த முகமது உசேன் என்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதிகளவில் மக்கள் குவிந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கடையை காலி செய்ய வலியுறுத்தியதோடு, பொதுமக்களையும் களைந்து செல்ல அறிவுறுத்தினர்.