தென்காசி மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைந்து, வெள்ளம் வடிந்ததால், 3 நாட்களுக்குப் பின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
சாலைகளில் தேங்கியிருந்த தண்ணீர் வெளியேறியதால், வாகன போக்குவரத்து சீரடைந்துள்ளது. செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் சாலையும் சீரடைந்ததை அடுத்து, அவ்வழியாக இருமாநில பேருந்துகள் சென்று வருகின்றன.