கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கியதால் போச்சம்பள்ளி,கீழ் குப்பம், புளியம்பட்டி, மத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள அறுவடைக்குத் தயாரான பருத்திச் செடிகள் அழுகத் தொடங்கியதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும், பருத்திக் காய்களை பூச்சி மற்றும் வண்டுகள் தாக்கியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.