தூத்துக்குடியில் பெய்த மழை காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது நாளாக மழை நீர் தேங்கியது.
மனநலப் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, காய்ச்சல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மழை நீரை வெளியேற்ற ஒரு மோட்டார் மட்டுமே செயல்பட்டு வருவதால் மற்ற மழை நீர் வெளியேறாமல் அப்படியே தேங்கியிருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.