தூத்துக்குடி மாநகரத்தில் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.
கோரம்பள்ளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சூழ்ந்த மழை நீர் வெளியேறி, பி.என்.டி காலனி, கதிர்வேல் நகர் போன்ற பகுதிகளில் புகுந்தது. 16 தெருக்களை கொண்ட பி.என்.டி காலனியில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள், வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்கள் வீடுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.