தென்காசியில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால், தமிழக - கேரளா எல்லைப் பகுதியாக விளங்கும் கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
பொதுமக்கள் உதவியுடன், உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் மண் மூட்டைகளைப் போட்டு செங்கோட்டை போலீசார் சீரமைத்தனர். நெடுஞ்சாலைத் துறை சார்பில் கான்கிரீட் கலவை கொட்டியும் சாலை சீரமைக்கப்பட்ட பிறகு இரண்டு நாள்களுக்குப் பிறகு மாநில எல்லையில் போக்குவரத்து சீரானது.