செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்...நீதிமன்ற அவமதிப்பு செயலில் ஈடுபட்டதால் உத்தரவு

Dec 14, 2024 09:48:16 PM

சஸ்பெண்டை எதிர்த்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போது அதில் தனது தரப்பு வாதத்தை முன் வைக்காமல் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்த சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உதவி பொறியாளராக 2012 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த செல்வநாயகம் என்பவருக்கு, 2023 ஆம் ஆண்டு உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து செல்வநாயகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சஸ்பெண்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தபோது, சென்னை பெருநகர வளர்ச்சி குழும துணைத் தலைவரால், உதவி செயற்பொறியாளராக நியமிக்கப்பட்ட செல்வ நாயகத்தை சஸ்பெண்ட் செய்ய உறுப்பினர் செயலருக்கு அதிகாரம் இல்லை என்றும் வழக்கு நிலுவையில் இருந்த போது சஸ்பெண்ட் உத்தரவை உறுப்பினர் செயலர் ரத்து செய்தது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் செல்வநாயகம் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, செல்வநாயகத்தின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, உடனடியாக பணியில் சேர செல்வநாயகத்திற்கு உத்தரவிட்டார்.

மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தனது தரப்பில் விளக்கத்தை அளிக்காமல், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்த பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலரின் செயல், நீதிமன்ற அவமதிப்பு என குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


Advertisement
கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் நிரம்பியவரிடம் ரூ.1.38 லட்சம் மோசடி...
சிறைக் கைதிக்கு கஞ்சா, செல்போன் சார்ஜர், சிம் கார்டு கொடுத்த வழக்கறிஞர்... அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார்
கனமழையால் மூழ்கிப் போன ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்.. கவலையில் ஆழ்ந்துள்ள விவசாயிகள்..!
அரியலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு... குடியிருப்புகளை கணக்கெடுக்க அமைச்சர் உத்தரவு
மீஞ்சூர் அருகே சாலையில் அணிவகுத்து கண்டெய்னர் லாரிகள் நின்றதால்பேருந்துகள், கார்கள், பைக்குகள் சாலைகளில் செல்வதில் சிரமம்
தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் 45,000 சதுர அடியில் புத்தக மையத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்
வீடுர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்...அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் பழனி நேரில் ஆய்வு
கூவம் கால்வாய் வழியாக சென்றபோது தவறி விழுந்த பெண்ணை பொக்லைன் இயந்திரத்தைகொண்டு மீட்ட ஆயுதப்படை
ஈஞ்சனேரி நிரம்பி உபரி வெளியேறியதால் மூழ்கிய பயிரை எடுத்துக் காட்டிய விவசாயிகள்
பாலாறு நீரால் கழிஞ்சூர் ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீரை பால் குடம், கிடா வெட்டுடன் வரவேற்ற கிராம மக்கள்

Advertisement
Posted Dec 14, 2024 in இந்தியா,Big Stories,

ரியல் புஷ்பா.. பச்ச புள்ளப்பா.. அப்பா கூட தான் வருவேன்.. அப்பாவை இறக்கி விட்ட போலீஸ்..! அல்லு அர்ஜூன் கைதுக்கு வலுக்கும் கண்டனம்..

Posted Dec 13, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

தார் வச்சிருகேன்ல.. தண்ணீரில் சும்மா சர்ர்ன்னு போயிருவேன்.. தள்ளுமாடல் வண்டியான சோகம்..! அப்ப சொன்னதெல்லாம் பொய்யா..?

Posted Dec 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பெத்தவ இப்படி துடிக்கிறனே.. நீதி வாங்கி கொடுங்களேன்.. தாயின் விபரீத முடிவால் அதிர்ச்சி..! சிறுவனின் உயிரிழப்புக்கு என்ன காரணம் ?..

Posted Dec 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வங்கி ஊழியர் கடத்தல் கண்ணை கட்டி சிறைவைத்து நகத்தை பிடுங்கி கொலை..! எக்ஸ் மிலிட்டரியின் எக்ஸ்ட்ரீம் சித்ரவதை..

Posted Dec 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அப்பா திருடனா இருக்கலாம்.. ஆனால் அவரு புள்ள தங்கமுங்க... நகை பறித்த ஆட்டோ ஓட்டுனர்..! போலீசில் பிடித்துகொடுத்த மகன்..


Advertisement