சென்னை ராயப்பேட்டையில் 300 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியவர், தனது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பதாக புகாரளித்துள்ளார்.
உட்லண்ட்ஸ் திரையரங்கம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்கில், RBL Paisa bazaar Duet Credit Card -ஐ ஸ்வைப் செய்து பெட்ரோல் நிரப்பியதாக அளித்த புகாரை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.