அரியலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை கணக்கெடுத்து உரியவர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டு உள்ளார்.
தா.பழூர் ஒன்றியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அவர், சேதம் அடைந்த தரைப்பாலம், சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து போக்குவரத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.