திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வெள்ளிவயல் சாவடியில் இருந்து வல்லூர் வரையிலான சாலையில் கண்டெய்னர் லாரிகள் அணிவகுத்து நின்றன.
காமராஜர் துறைமுகத்திற்குள் செல்ல தாமதமாவதால் கண்டெய்னர் லாரிகள் சாலைகளில் வரிசைகட்டி நிற்பதாக கூறப்படுகிறது. இதனால், பேருந்துகள், கார்கள், பைக்குகள் இந்த சாலைகளில் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.