சென்னை, மதுரவாயலில் கூவம் தரைப்பாலத்தில் ஒடிய மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு தடுப்புகளில் மோதி நின்ற காரில் சிக்கிய நபரை காரின் கண்ணாடியை உடைத்து ஜேசிபி உதவியுடன் கயிறு கட்டி போலீசார் பத்திரமாக மீட்டனர்.
தரைப்பாலத்தில் யாரும் செல்லாத வகையில் கயிறு கட்டி தடை விதித்த போதும், முகப்பேர் பகுதியை சேர்ந்த சுனில் வர்கீஸ் மதுபோதையில் தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது மழைவெள்ளத்தில் சிக்கியதாக மதுரவாயல் போலீசார் தெரிவித்தனர்.