சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தலுக்கு உதவியாக இருந்த ஊழியர் மற்றும் குருவிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
3துபாயிலிருந்து இலங்கை செல்லும் வழியில் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது, 28 வயது பயணி ஒருவர் சுமார் 12 அடி உயர கண்ணாடி தடுப்பின் மறுபகுதியில் உள்ள நபருக்கு தங்ககட்டிகளை மறைத்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கக் கட்டிகளை எடுத்த நபர் விமான நிலைய ஊழியரிடம் கொடுத்து வெளியே கொண்டு வர கூறியதாக கூறப்படுகிறது.