கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது மாலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீபம் ஏற்றுவதற்கான காடா துணியை மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.
முன்னதாக அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றியவர்களுக்கு மரியாதை செலுத்திய ஊழியர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் மலை உச்சிக்கு சென்றனர்.