சிவகங்கை அருகே குடும்பத் தகராறில் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிக் கொலை செய்ததாகக் கூறப்படும் தாயிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருமன்பட்டியைச் சேர்ந்த ரஞ்சிதா என்ற அந்தப் பெண், "குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டேன்" என கூறியவாறு திருமலை பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.
அவரைப் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ரஞ்சிதா கொடுத்த தகவலின் பேரில் கீழப்பூங்குடியிலுள்ள கிணற்றிலிருந்து குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.