கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதியில் நடைபெற்ற அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில் பங்கேற்பதற்காக வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அய்யா வைகுண்டபதியில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, அய்யா வழி ஆய்வு மைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய ஆளுநர், மரக்கன்றையும் நட்டு வைத்தார்.