தென் அமெரிக்க நாடான சிலியில், முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் பேட்டரி பேருந்தை அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அறிமுகப்படுத்தி வைத்தார்.
பெட்ரோல், டீசல் மூலம் ஏற்படும் காற்று மாசை குறைப்பதற்காக இவ்வகை பேருந்துகளை அறிமுகப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். ஹைட்ரஜன் பேருந்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் தூரம் செல்லலாம் எனக் கூறப்படுகிறது.