கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் உறவினர் வீட்டு சுப நிகழ்வில் கலந்து கொள்ள வந்த 2 குழந்தைகள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
அந்தப் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் இருப்பதால் பொதுமக்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் அதை மீறி நாகர்கோவிலைச் சேர்ந்த சிலர் குளிக்கச் சென்றபோது குழந்தைகள் பிரனித், பிரதிஷா ஆகியோர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு பின் சடலமாக கரை ஒதுங்கினர்.