தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இன்று காலை மாணவ மாணவிகள் வகுப்பில் அமர்ந்திருந்தபோது கட்டிடத்தின் மேற்கூரை கான்கிரீட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
மாணவமாணவிகள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் வகுப்பறை உடனடியாக பூட்டப்பட்டு, மாணவ மாணவிகள் மரத்தடியில் அமர வைக்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.