ரெட் அலெர்ட் திரும்ப பெறப்பட்ட 3 மாவட்டங்கள் உள்பட 7 மாவட்டங்களில் அதிகனமழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக டிசம்பர் 1-ம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்திருந்தது.
புயல் கரையை கடந்து வலுவிழந்த பிறகு இரவு 9 மணி அளவில் ரெட் அலெர்ட் திரும்ப பெறப்பட்டது.
ஆனாலும், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மட்டுமின்றி ரெட் அலெர்ட் விடப்படாத கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டத்திலும் வானிலை மைய கணிப்பை மீறி அதிகனமழை பெய்துள்ளது.