இலங்கை யாழ்பாணம் மாவட்டம் பருத்தித்துறை கடல் பகுதியில் முகில் நீர்த்தாரை எனப்படும் சுழல் காற்று ஏற்பட்டதை மீனவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
கடலின் மேல் வீசக்கூடிய காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடல் சுழல் ஏற்படுகிறது.
பருவநிலை மாற்றம் ஏற்படும் போது சுழல் ஏற்பட்டு, மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது சூழல் மறைந்து விடும்.
இந்த அதிசய நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.