தமிழக அரசு எடுத்து வந்த மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் சென்னையில் 6 மணி நேரத்தில் தீர்வு கிடைத்திருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் மழைக்கால நோய் மருத்துவ முகாமை துவக்கி வைத்த மா.சுப்பிரமணியன், 20 சென்டி மீட்டர் மழை பெய்தால் சென்னையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதைகள் வாரக்கணக்கில் மூடப்படும் நிலை தற்போது மாறி விட்டதாக தெரிவித்தார்.