சென்னை வேளச்சேரியில் 60 வயது ஆண் நண்பருடன் லாட்ஜில் அறை எடுத்து தங்கிய 27 வயது பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவர் பீர் அருந்திய 6 பாட்டில்களை சோதனைக்காக போலீசார் எடுத்துச் சென்றனர்.
வேளச்சேரி, தரமணி 100 அடி சாலையில் உள்ள லாட்ஜில் 60 வயது ஆண் ஒருவருடன் தங்கி இருந்த 27 வயது பெண் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டதாக வேளச்சேரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பெண்ணின் சடலைத்தை கைபற்றி பிரேத பரிசோதணைக்காக சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
சிந்தாதிரி பேட்டையை சேர்ந்த ஜோதி என்பவர்க்கும் கணவனை பிரிந்து வாழ்ந்த ரம்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
ரம்யாவிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், சனிக்கிழமை மாலை ரம்யாவும், ஜோதியும், லாட்ஜுக்கு வந்து அறை எடுத்து தங்கி விடிய விடிய மது அருந்தி உள்ளனர். அந்த லாட்ஜுக்கு வரும்போதே 6 பீர் பாட்டில்களை கையோடு வாங்கி வந்ததாக கூறப்படுகின்றது. அதிகாலை வரை 4 பீர் குடித்த ரம்யா, நடுராத்திரியில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதாகவும், டாக்டரிடம் செல்லலாமா? என கேட்டதற்கு வேண்டாம் என கூறி மீண்டும் 2 பாட்டில் பீர் குடித்ததாக தெரிவித்த ஜோதி, காலையில் குளித்து விட்டு வந்த சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்த ரம்யா பலியானதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். லாட்ஜ் அறையில் மயங்கி கிடந்த ரம்யாவை தனியார் மருத்துவமணைக்கு தூக்கிச்சென்றதாகவும், அங்கு ரம்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாக லாட்ஜ் மேலாளர்கள் கூறினர்.
சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்த போலிசார், ரம்யா அருந்தியதாக கூறப்பட்ட 6 பீர் பாட்டில்களையும் சோதனைக்காக எடுத்துச்சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதணைக்கு பிறகே அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தெரியவரும் என போலிசார் தெரிவித்தனர்.