கோவா கடல் பகுதியில் விசைப்படகு மீது நீர்மூழ்கி கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் உட்பட இருவர் கடலில் விழுந்து மாயமாகினர்.
கடலில் தத்தளித்த 11-பேரை கடற்படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் மாயமான மீனவரை தேடி கண்டு பிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.