வழக்கு விசாரணைக்காக கும்பகோணம் எடுத்துச் செல்லப்பட்ட காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள் மீண்டும் காஞ்சிக்கு எடுத்து வரப்பட்டு திருமேனி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
அம்மன் மற்றும் சோமாஸ்கந்தர் சிலைகளை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அந்த சிலைகளை கும்பகோணத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இந்த வழக்கின் விசாரணை காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டதால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட சிலைகளின் நீளம், உயரம், எடையை இந்துசமய அறநிலையத்துறையினர் சரிபார்த்தனர்.