தென்காசி மாவட்டம் கள்ளம்புளியில் நள்ளிரவில் அம்மன் கோவில் உண்டியலை பெயர்த்து சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ற கும்பல் பணத்தை எடுத்துவிட்டு காட்டுப்பகுதியில் வீசி சென்றது.
திருட்டு கும்பல் திருடிவிட்டு செல்லும் போது, சரக்கு வாகனத்திற்கு வழி ஏற்படுத்துவதற்காக தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்களை நகர்த்தி விட்டு செல்லும் சி.சி.டி.வி பதிவு வெளியாகி உள்ளது.