திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வன்னியந்தாங்கல் கிராமத்தில் சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட விஜயராஜா அக்ரோ ஹைடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கோ- 51 ரக நெல் விதைகள் 5 நாட்களாகியும் முளைக்காத நிலையில், வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
விதைக்கப்பட்டுள்ள நெல்மணிகள், பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை பரிசோதித்த பிறகு செய்தியாளரிடம் பேசிய பாலாஜி, 25 சதவீதத்திற்கும் குறைவாகவே முளைப்புத்திறன் உள்ள நெல் விதைகளை வழங்கிய கோயம்புத்தூரில் உள்ள விஜயராஜா அக்ரோ ஹைடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.