சிம் கார்டே இல்லாமல் ஃபோன் பேசும் முயற்சியாக, இந்திய சாட்டிலைட் நிறுவனமான வியாசட்டுடன் இணைந்து, BSNL நிறுவனம் தனது டைரக்ட்-டு-டிவைஸ் தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
டைரக்ட் டு டிவைஸ் சேவை என்பது எந்தவித கேபிள் இணைப்புகள் மற்றும் மொபைல் டவர்கள் இல்லாமல் சாதனங்களை நேரடியாக செயற்கைக்கோள் தொடர்புடன் இணைக்க அனுமதிக்கிறது.
சாட்டிலைட் போன்களை போலவே, இந்தப் புதிய தொழில்நுட்பம் Ios மற்றும் ஆண்ட்ராய்டால் இயங்கும் செல்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்சுகளில் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.