அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முதன்முறையாக பேட்டியளித்த அவர், நாட்டு மக்களின் விருப்பத்தை ஏற்பதாக தெரிவித்தார்.
டிரம்ப்பை தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்ததாகவும், அதிகார மாற்றத்திற்காக அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட இருப்பதாகவும் பைடன் கூறினார்.
கமலா ஹாரிஸ் முழு மனதுடன் தேர்தலில் பணியாற்றியதாகவும், அவரும் அவரது குழுவினரும் தாங்கள் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கு பெருமைகொள்ள வேண்டும் என்றும் பைடன் குறிப்பிட்டார்.