சீனாவின் விண்வெளி நிலையத்திற்கு சென்ற 3 விண்வெளி வீரர்கள், ஆறு மாதம் தங்கி, நுண் உயிரியல், மருத்துவம், நுண் ஈர்ப்பு விசை, மருத்துவம், அணுக்கள், திசுக்களில் ஏற்படும் மாற்றம் தொடர்பாக 90 ஆய்வுகள் மேற்கொண்டு, அதன் முடிவுகளுடன் பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
ஷென்சூ 18 என்ற விண்கலத்தில் ஏப்ரல் மாதம், சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையம் சென்ற வீரர்கள் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திய பொருட்களை பூமிக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், அதன் ஆராய்ச்சி முடிவுகள் பூமிக்கும், விண்வெளிக்கும் இடையிலான சூழல் மாற்றங்களை அறிந்து கொள்ள உதவும் என்று, சீன அறிவியல் அகாடமி தெரிவித்துள்ளது.