ஜார்கண்ட் மாநில அரசு மாஃபியாக்களின் அடிமையாகிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
கர்வாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பிரதமர், ஜார்கண்ட் முக்தி மோச்சா தலைமையிலான கூட்டணி அரசு, தொடர்ந்து வங்காளதேச ஊடுருவல்காரர்களை தொடர்ந்து அனுமதிப்பதால், மாநிலத்தின் பழங்குடியின மக்கள் தொகை குறைந்துவிடும் எனவும் தெரிவித்தார்.
ஊடுருவலை பா.ஜ.க இரும்பு கரம் கொண்டு அடக்கும் எனத்தெரிவித்த பிரதமர், ஜார்கண்ட் முக்தி மோச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சி எம்.எல்.ஏ, எம்.பிக்கள் ஊழலில் திளைத்து வருவதாகவும் பிரதமர் குற்றம்சாட்டினார்.