மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் பிரார்த்தனையின் போது இரு தரப்பினர் மோதி கொண்ட விவகாரத்தில் 3 பேர் மீது கீழவாசல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போதகர் ராஜா ஸ்டாலின் தலைமையில் பிரார்த்தனை நடந்தபோது, வரவு, செலவு கணக்கு விபரங்கள் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு புது நிர்வாகத்தினரும், பழைய நிர்வாகத்தினரும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.