மாமன்னன் ராஜ ராஜ சோழனின் ஆயிரத்து 39ஆவது ஆண்டு சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரியக்கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் செய்து பந்தல் கால் நடப்பட்டது.
வரும் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்கள் சதய விழா கொண்டாட உள்ள நிலையில், பந்தல் காலுக்கு மஞ்சள், இளநீர், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.