செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னை அடுத்த வடபெரும்பாக்கத்தில் மூன்று நாட்களாகியும் வடியாமல் மழை நீர் தேங்கியுள்ளதாக அப்பகுதியினர் புகார்

Oct 17, 2024 09:04:06 PM

சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் முற்றிலும் வடிந்துள்ள நிலையில், ஒரு சில இடங்களில் தொடர்ந்து மழை வெள்ளம் தேங்கியுள்ளதற்கான விளக்கத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாதவரத்தை அடுத்த வடபெரும்பாக்கத்தில் பிரதான சாலையில் மூன்று நாட்களாகியும் மழை நீர் வடியாமல் தேங்கியுள்ளதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள், ரெட்டேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் வடபெரும்பாக்கத்தின் பாலாஜி நகர், வெஜிடேரியன் வில்லேஜ் ஆகிய பகுதிகளை கடந்து கொசஸ்தலை வடிநிலப் பகுதியை சென்றடைவதாகவும், ஏற்கனவே தேங்கியுள்ள மழைநீருடன் ஏரி நீர் கலப்பதால் வடிவதில் தாமதம் ஆவதாகவும் தெரிவித்தனர். 

ஆவடியை அடுத்த கன்னடபாளையம் முதல் மங்களம் நகர் வரையிலான பிரதான சாலையில் 3வது நாளாக மழை வெள்ளம் தேங்கியுள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நீர்வளத்துறை அதிகாரிகள், 570 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவில்பதாகை ஏரியில் உள்ள 2 கலங்கலில் இருந்து உபரி நீர் வெளியேற போதிய இணைப்புகள் இல்லாததால் கணபதி அவென்யூ வழியாக வெளியேறி பிரதான சாலைகளில் ஓடுவதாக தெரிவித்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீர் 3 நாட்களாகியும் வடியவில்லை என அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அதிகாரிகள், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் முறையாக தூர்வாரப்படாததால் மழை வெள்ளம் கொசஸ்தலை ஆற்றில் சென்று கலப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். 


Advertisement
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பிடிவாரண்ட்... சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெறுவது தண்டனைக்குரிய குற்றம் இத்தாலி அரசு
எந்த காலத்திலும் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைக்காது - அமைச்சர் சக்கரபாணி
அண்ணாமலை பல்கலை பட்டமளிப்பு விழா... மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி
உலகிலேயே சிறிய ரக விமான சேவை... ஸ்காட்லாந்தில் உள்ள ஓர்க்னி தீவுகளுக்கு இடையே இயக்கம்
சென்னை மெரினா கடற்கரையில், எச்சரிக்கையை மீறி குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியா கடற்கரைகளில் மர்மப் பொருள் கரை ஒதுங்கியதால் மக்கள் குளிக்கத் தடை
நாகரிகம் மற்றும் கலாசாரத்தின் ஆன்மாவாக இருப்பது மொழிதான் - பிரதமர் மோடி
அர்ஜெண்டினாவில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன் விடுதி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு
சென்னை, மணலிப்புதுநகரில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர் வடியவில்லை என புகார்

Advertisement
Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

அந்த மனசு தான் சார் “கடவுள்” உயிரை பணயம் வைத்து பத்திரமாய் மீட்ட வல்லவர்கள்..! மின்சாரம் தாக்கி குருக்கள் தப்பியது எப்படி ?

Posted Oct 17, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

மாமூல் ரவுடிகள் அட்டூழியம் கடைக்காரர் மண்டை உடைப்பு ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல்..! நீதி கேட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை

Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை


Advertisement