செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சி.ஐ.டி.யு பிரச்சனையால் சாம்சங் நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு வருமாறு ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேசம் அழைப்பு

Oct 09, 2024 02:24:18 PM

சி.ஐ.டி.யு பிரச்சனையால் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தை தங்கள் மாநிலத்திற்கு வருமாறு ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேசம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், சாம்சங் நிர்வாகத்துடன்குஜராத் மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் ஊழியர்கள் சம்பள உயர்வு, போனஸ் மற்றும் சில வசதிகளைக் கோரி கடந்த 9-ந் தேதி முதல் போராடிவருகின்றனர்.

இதில், தமிழ்நாடு அரசு தலையிட்ட நிலையில், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சி.ஐ.டி.யு சங்கத்தை அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக பதிவு செய்ய சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொள்ளுமாறு சி.ஐ.டி.யு அமைப்பினர் கோரியதாகவும், ஆனால், ஏற்கனவே தங்கள் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கென நலச்சங்கம் இருப்பதால் சிஐடியுவை பதிவு செய்ய முடியாது என மறுத்த சாம்சங் நிறுவனம், நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளது.

தொழிற்சங்க பிரச்சனையை முன் வைத்து 2,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் சாம்சங் போன்ற நிறுவனம் இடம் மாறினால் பிற நிறுவனங்களும் அதையே பின்பற்ற வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய தயங்குவார்கள் என தமிழ்நாடு அரசு கவலைப்படுதாக சொல்லப்படுகிறது.


Advertisement
சென்னையில் ரூட்டுத் தல விவகாரத்தில் தாக்கப்பட்ட மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் 100 அடி நீளம் வரை உடைந்து விழுந்த நடைமேடை
கோயம்புத்தூர் சூலூர் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் இருவர் உயிரிழப்பு
திருப்பூர் அருகே புகையிலை கேட்டு தர மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது
திருப்பூரில் பட்டாசு தயாரிக்கும்போது நிகழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 3 பலியான சம்பவத்தில் 2 கைது
ஹரியானாவில் 3வது முறை வெற்றி பெற்ற பாஜக குறித்து மோடி பெருமிதம்
அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்புக்காக ஆதரவு திரட்டிவரும் எலான் மஸ்க்
பல்கலைக் கழகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைத்தது... அர்ஜெண்டினா அரசை கண்டித்து திறந்த வெளியில் நடைபெற்ற வகுப்புகள்
சென்னையில் 18 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு ரூ.50 கோடி நிலத்தை மீட்டெடுத்த நடிகர் கவுண்டமணி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோபியாவில் புதிய அதிபர் தேர்வு

Advertisement
Posted Oct 09, 2024 in தமிழ்நாடு,Big Stories,

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவர் கால்வாயில் விழுந்து பலி..! ஆற்றில் இருந்து சடலம் மீட்பு

Posted Oct 09, 2024 in சென்னை,Big Stories,

fake ப்ரியாவை நம்பி ஏமாந்த அந்த 200 பேர் ரூ 2,00,000 போச்சிப்பா..! என்னம்மா.. இப்படி பன்றீங்களேம்மா...

Posted Oct 09, 2024 in இந்தியா,Big Stories,

ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பள்ளத்தாக்கில் சரிந்த காங்கிரஸ் 2வது பெரிய கட்சியான பா.ஜ.க காஷ்மீர் ஆப்பிளை ருசிக்கத் தவறிய காங்கிரஸ் ஜம்முவில் மீண்டும் சாதித்த பா.ஜ.க

Posted Oct 08, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

விவாகரத்து கேட்ட மனைவி கொன்று புதைத்த கணவன் நிர்க்கதியான பெண் குழந்தைகள்!

Posted Oct 08, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“மன்மதன்” சிம்புவுக்கே டஃப் கொடுத்த கேடி லேடி “பவுடர் ஜமீமா”..! வசதியான பசங்கன்னா “கிட்னாப்”..!


Advertisement