செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இன்று இந்திய விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சி

Oct 06, 2024 06:23:04 AM

21 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இந்திய விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்திய விமானப்படையின் 92ம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் இந்த நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் சென்னைக்கு வருகின்றனர்.

மெரினா கடற்கரைக்கு மேலே வான் பரப்பில்,காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் சாகச நிகழ்ச்சியில், இந்திய விமானப்படையின் திறன், வலிமையை பறைசாற்றும் வகையில் 72 விமானங்கள் ஈடுபட உள்ளன.

பிரான்ஸ் தயாரிப்பான ரபேல், மிராஜ் 2000, ரஷ்யாவின் சுகோய், மிக் 29 பைட்டர்ஸ், ஐரோப்பிய சீப்கேட் ஜாக்குவார், அமெரிக்காவின் குளோப் மாஸ்டர் ஆகியவற்றுடன், நீர்மூழ்கிக் கப்பலை தாக்கும் போர் விமானங்கள் சாகசம் செய்ய உள்ளன.

இந்திய விமானப்படையின் முக்கிய ராட்சத விமானமாகக் கருதப்படும் ரஷ்ய தயாரிப்பான எஸ்.யு.30 பிளாங்கர் விமானமும், அனைத்துக் கருவிகள், ஆயுதங்களை தாங்கிய 39 டன் எடையுடன் கூடிய சுகோய் 30 ரக விமானமும், இந்திய தயாரிப்பான தேஜாஸ் விமானம் மற்றும் பிரசாந்த் ஹெலிகாப்டரும் சாகச விமானங்களில் இடம்பிடித்துள்ளன.

இந்திய விமானப்படையில் எப்போதும் அங்கம் வகிக்கும் சூர்யகிரண், ஹாக் எம்கே ஜெட் விமானம் சாரங் ஹெலிகாப்டர் ஆகியவையும், புயல், சங்கம், பல்லவா, சேரா, சோழா, காஞ்சி, நட்ராஜ், நீலகிரி, மெரினா, பாண்டியன், மகாபலி உள்ளிட்ட பெயர்களில் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட உள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

சுமார் 15 லட்சம் பார்வையாளர்கள் இடம் பெறும் இந்த கண்காட்சி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற இந்திய விமானப்படை இலக்கு வைத்துள்ளது.


Advertisement
காதலியின் நகைகளை மீட்க ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஹரியானாவில் ஆட்சியமைக்குமா காங்கிரஸ்?
"திமுகவின் பெயர், கொடி ,சின்னம் மாறவில்லை, எதிரிகளின் வடிவம் மாறியிருக்கலாம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அக்டோபர் 1-ல் இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்.. 4 அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டது இஸ்ரேல்
சென்னையில் நடைபெறுகிறது 'சைக்ளோத்தான் - 2024' போட்டி.. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..
கடன்தொல்லை, காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை..
வள்ளலாரின் 201 வது பிறந்த நாள் விழாவில் திருஅருட்பா உரைநடை நூலை வெளியீட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி
மத்திய ஆப்ரிக்க காங்கோ நாட்டில் ஏரியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 78 பேர் உயிரிழப்பு
சென்னை பைனான்ஸியரின் காரை திருடி பணம் பறித்த ஊழியர் உட்பட 5 பேர் கும்பல் கைது
சென்னையில் கிரேன் மீது பைக் மோதிய விபத்தில் போக்குவரத்து தலைமை காவலர் உயிரிழப்பு

Advertisement
Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்

Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..


Advertisement