பெரியாருக்கும் திராவிட அரசியலுக்கும் சம்பந்தம் இருக்கலாம் ஆனால் தேசிய அரசியலுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு. நாகராஜன் தங்களுக்கு பெரியாரைத் தொட வேண்டிய அவசியமில்லை என்றார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்துப் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மறுக்கும் கருணாநிதி, ஸ்டாலின் வழியில் விஜயும் செல்வதாகத் தெரிவித்தார்.