இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
குரங்கம்மை தொற்று பாதிப்பு பரவியுள்ள நாட்டில் இருந்து இந்தியா வந்த இளம் வயது ஆண் ஒருவருக்கு அந்நோய் பாதிப்புக்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நபரின் உடல்நிலை சீராக உள்ள நிலையில், நோய்பாதிப்பை உறுதி செய்ய அவரது மாதிரி, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 120 நாடுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், 220 பேர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.