அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் மருத்துவக் கனவு நனவாகியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7.5% இடஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். சீட் பெற்ற மாணவர்கள் புதுக்கோட்டையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் பேட்டியளித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.
தி.மு.க. ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்த தகவல்கள் வெளிப்படைத்தன்மையாக இல்லை என்றும், எவ்வளவு முதலீடு கிடைத்தது, எத்தனை பேர் வேலைவாய்ப்புகளை பெறுவர் உள்ளிட்டவற்றை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் இ.பி.எஸ். வலியுறுத்தினார்.
மேலும், விஜய்யைக் கண்டு தி.மு.க. பயப்படுகிறதோ இல்லையோ, ஜனநாயக நாட்டில் யார் அனுமதி கேட்டாலும் கொடுப்பதுதான் முறை என த.வெ.க. மாநாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு இ.பி.எஸ். பதிலளித்தார்.
பா.ஜ.க.வுடனான கூட்டணி இல்லை என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அரைத்த மாவை திரும்ப அரைக்க வேண்டியதில்லை என்றும் இ.பி.எஸ். கூறினார்.