ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் மறைந்த ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளியும், கூலிப்படை தலைவனுமான சீசிங் ராஜா மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்தனர்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பிரபல ரவுடி சீசிங் ராஜா மீது கொலை, ஆள்கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
போலீசாரின் நெருக்கடி காரணமாக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் தலைமறைவாக இருந்து தனது ஆட்கள் மூலம் சீசிங் ராஜா தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேளச்சேரி பகுதியில் பார் ஊழியர் ஆனந்தன் என்பவரை பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் சீசிங் ராஜா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.