முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, போரடிக்கும்போதெல்லாம் மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்தவர் என்றும் இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தை பற்றி பேச தகுதியில்லாத ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்தின் 49ஆண்டு நிறைவு தின நிகழ்வில் பேசிய அண்ணாமலை, எமர்ஜென்சிக்குப் பின்னர் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த பிறகு மக்கள் மீதான அச்சத்தில் இந்திரா காந்தி வெளிநாடு செல்லும் திட்டம் இருந்ததாகவும் அப்படி அவர் வெளியேறி இருந்தால் நாடு முன்னேறி இருக்கும் என்றும் கூறினார்.