அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க. குழுவினர் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.
பின்னர் பேட்டியளித்த பா.ஜ.க. குழுவில் இடம் பெற்றிருந்த தமிழிசை, விஷச்சாராய விவகாரத்தில் ஆளும் கட்சியினர் மீது குற்றச்சாட்டு உள்ளதால் சிபிசிஐடி விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றும், அதனால் தான் சிபிஐ விசாரணை கோருவதாகவும் தெரிவித்தார்.